அக் ஷயா பள்ளியில் விளையாட்டு விழா
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 23 ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. மாணவர்களின் அணிவகுப்பு ,தொடக்கப்பள்ளி மாணவர் குழு உடற்பயிற்சி நடந்தது. பள்ளி செயலாளர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். மாநில கூடைப்பந்து வீரரும் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி பேராசிரியருமான அதிரா மனோஜ், முன்னாள் மாணவியும் டெக்ஸ்அஸ் இன்ஸ்ட்ருமென்ட் நிறுவன அனலாக் பொறியாளருமான ஜெயஸ்ரீ கலந்து கொண்டனர். இவர்களுக்கு பள்ளி தாளாளர் சுந்தராம்பாள் நினைவு பரிசு வழங்கினார். நிர்வாகி புருஷோத்தமன் பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் சவும்யா வாழ்த்துரை வழங்கினர்.