உங்களுடன் ஸ்டாலின் முகாம் கலெக்டர் அழைப்பு
திண்டுக்கல்: ''உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பல்வேறு சேவைகள் வழங்கப்படுவதோடு , மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக '' திண்டுக்கல் கலெக்டர் சரவணன் கூறினார்.அவர் கூறியதாவது : மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் ,கிராம பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம் துவங்கப்படுகிறது.மாவட்டத்தில் இத்திட்டம் ஊரக ,நகர்ப்புற பகுதிகளில் 4 கட்டங்களாக 360 முகாம்களாக நடக்க உள்ளன. அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது திட்டத்தின் நோக்கம். நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளை சார்ந்த 46 சேவைகளும் ,ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், தகவல் கையேடும், விண்ணப்பத்தினை வழங்கி வருகின்றனர்.மகளிர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இருப்பின் முகாமிற்குச் சென்று விண்ணப்பத்தினை அளிக்கலாம். முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணி மூன்று மாதங்கள் நடைபெறும் என்றார்.