உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புதருக்குள் திருட்டு டூவீலர்

புதருக்குள் திருட்டு டூவீலர்

கோபால்பட்டி,: கோபால்பட்டி அருகே திருடிய டூவீலரை புதருக்குள் மறைத்த திருடர்களை சாணார்பட்டி போலீசார் தேடி வருகின்றனர். வேம்பார்பட்டி நாராயணபிள்ளை குளம் அருகே புதரில் டூவீலர் அதன்மேல் பனை ஓலைகள் , செடி, கொடிகளை போட்டு சிலர் மறைத்து வைத்திருந்தனர். அவ்வழியாக சென்ற மக்கள் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ., பொன் குணசேகர் தலைமையிலான போலீசார் நம்பர் பிளேட் இல்லாமல் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டூவீலரை கைப்பற்றினர். சில நாட்களுக்கு முன்பு மதுரை ஊமச்சிக்குளம் பகுதியில் டூவீலருடன் நபர் காணவில்லை என புகார் அளித்த நிலையில் அவரது டூவீலராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை