உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பிஸ்மி நகரில் மூதாட்டி கொலை வழக்கில் கணவனே மனைவியை கொன்றது அம்பலமானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முகமதா பீவியின் நகையை வாங்கி ஜெய்னுல்லா அவரது உறவினருக்கு கொடுத்துள்ளார். முகமதா பீவி தனது நகையை கேட்டு ஜெயினுல்லாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயனுல்லா முகமதாபீவி தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார்.பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வீட்டிற்குள் அவரது மனைவி சடலத்துடனே இருந்துவிட்டு, எப்பொழுதும் போதும் சுமார் 4.45 மணிக்கு அருகிலுள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார்.பின்னர் 6 மணியளவில் தனது வீட்டிற்கு வந்து பார்த்து மனைவியை கொலை செய்துவிட்டனர் என கதறி அழுது நாடகம் ஆடியது தெரியவந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் ஜெயனுல்லா மனைவி முகமதா பீவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ஜெயனுல்லாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ