உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சன் லயன்ஸ் நிர்வாகிகள் பதவியேற்பு

சன் லயன்ஸ் நிர்வாகிகள் பதவியேற்பு

கொடைக்கானல் : - கொடைக்கானல் சன் லயன்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. சர்வதேச பகுதி தலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு, புதுச்சேரி சுற்றுச்சூழல் தலைவர் டி. பி. ரவீந்திரன் முன்னிலை வகித்தார். தலைவராக செந்தில்குமார்,செயலாளராக சுரேஷ் பால்ராஜ், பொருளாளராக நீத்து கிரண் ரவீந்திரன் பொறுப்பேற்றனர். புதிய உறுப்பினர்களும் பொறுப்பேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், சுப்புராஜ், ராதாகிருஷ்ணன்,மண்டல தலைவர் ஜெகதீசன், வட்டார தலைவர் ஆனந்தராஜ்,முன்னாள் தலைவர் சுதாகர், பொருளாளர் மங்கையர்கரசி கலந்து கொண்டனர். ரூ. 4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கொடைக்கானல் தமிழ் சங்கம் சார்பில் ஓவியம், விளையாட்டு, கவிதை, கட்டுரை போட்டி நடந்தன. தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !