உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுகாதாரமான பேரூராட்சியாக தாடிக்கொம்பு தேர்வு; செயல் அலுவலர் சந்தனம்மாளுக்கு மத்திய அரசு விருது

சுகாதாரமான பேரூராட்சியாக தாடிக்கொம்பு தேர்வு; செயல் அலுவலர் சந்தனம்மாளுக்கு மத்திய அரசு விருது

தாடிக்கொம்பு : சிறந்த சுகாதாரமான பேரூராட்சியாக திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதன் செயல் அலுவலர் சந்தனம்மாளுக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வாரியாக சிறந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளை தேர்வு செய்து நினைவு பரிசும், பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகிறது. அதன்படி 2022--23 ஆண்டுக்கான சிறந்த நிர்வாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ,சுவட்ச் சர்வக் ஷான் அவார்டு -2023 என்ற பெயரில் டெல்லியில் நேற்று விருது வழங்கப்பட்டது.தாடிக்கொம்பு பேரூராட்சி சிறந்த சுகாதாரமான, துாய்மையான, தரமான குடிநீர் வசதி உடைய பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதன் செயல் அலுவலர் என்.சந்தனம்மாள்டெல்லிக்கு அழைக்கப்பட்டாார் . அங்கு நடந்த விழாவில் இதற்கான விருதை பெற்றார்.தமிழக அளவில் சங்கர்லால் உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மேயர்கள்,நகர சுகாதார அலுவலர்கள், கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், தலைவர்கள் உள்ளிட்ட 60 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறந்த நிர்வாகங்களுக்கான பரிசும் பாராட்டு சான்றிதழ்கள் டெல்லியில் நடந்தவிழாவில் நேற்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி