அமைச்சர் சுப்ரமணியனுக்கு எதிராக புளி விவசாயிகள் போராட்டம்
கோபால்பட்டி : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி நத்தம் பகுதியில் பிரசாரம் செய்தபோது அவரை சாணார்பட்டி பகுதி விவசாயிகள் சந்தித்து புளி விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், புளியை வருடம் முழுவதும் இருப்பு வைக்க நத்தம் பகுதியில் அரசு குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என கோரினர். அ.தி.மு.க., அரசு அமைந்த உடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பழனிசாமி உறுதியளித்தார். இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் 'புளி கொட்டை எடுத்ததா 'என கூறி உள்ளார்.இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதை கண்டித்து கோபால்பட்டி அருகே கே.ஐயா பட்டியில் புளி கூடைகளுடன் புளி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.