உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தமிழ் புத்தாண்டு: கோயில்களில் வழிபாடு

தமிழ் புத்தாண்டு: கோயில்களில் வழிபாடு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தமிழ் புத்தாண்டு நாளான நேற்று திண்டுக்கல்லில் அதிகாலையிலேயே கோயில்கள் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், 108 விநாயகர், தாடிகொம்பு சவுந்திராஜ பெருமாள், அபிராமி அம்மன், உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம், தீபாரதனை நடந்தது.மேலும், ஒய்.எம்.ஆர்., பட்டி சுப்பிரமணியசாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன், கந்தக்கோட்டம் என முருகன் கோயில்களில் திரளான மக்கள் குவிந்திருந்தனர். புத்தாடை அணிந்து, பெரியோர்களிடம் சிறு குழந்தைகள் ஆசி பெற்று பரிசுகளை பெற்றுக் கொண்டனர். வீடுகளில் பூஜைகள் நடத்தி பஞ்சாங்கம் வாசித்து புத்தாண்டை பொதுமக்கள் வரவேற்றனர்.ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு பல்வேறு வகையான அலங்காரங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. ஏகாம்பரேஸ்வரர் சன்னதி, குழந்தை வேலப்பர், பெயில் நாய்க்கன்பட்டி காளியம்மன், தங்கச்சியம்மாபட்டி கரை மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அலங்காரத்துடன், பூஜைகள் நடந்தது. பொருளூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் குத்துவிளக்கு பூஜை, 16 வகையான அபிஷேக, ஆராதனை நடந்தது.நத்தம்: மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள், வேம்பார்பட்டி வெங்கடேச பெருமாள், கோவில்பட்டி கைலாசநாதர், அரண்மனைசந்தன கருப்பு, அசோக்நகர் பகவதி அம்மன்,குட்டூர் அண்ணாமலையார், காளியம்மன், ராக்காயி அம்மன், தில்லை காளியம்மன் உள்பட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி, காமாட்சி மவுனகுருசாமி மடத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில், விஸ்வரூப தரிசனம் நடந்தது. பால், பன்னீர், இளநீர் தயிர், தேன் உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடந்தது.*சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு பழக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது.பழநி: ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம், அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தோடு தீபாராதனை நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொடைக்கானல்: கொடைக்கானல், தாண் டிக்குடி மலைப் பகுதியில் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பூம்பாறை குழந்தை வேலப்பர், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர், ஆனந்தகிரி பெரிய மாரியம்மன், வில்பட்டி வெற்றி வேலப்பர், மூஞ்சிக்கல் வரதராஜ பெருமாள், பண்ணைக்காடு மயான காளியம்மன், கானல்காடு பூதநாச்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தாண்டிக்குடி: பாலமுருகன் கோயிலில் சுருளியிலிருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தக்காவடிகள் ஊர்வலமாக மலைக் கோயிலை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அரசன் கொடை கதவுமலை சிவன் குகை கோயிலில் முகாமிட்டனர். வழக்கமாக லிங்கமாக காட்சி தரும் சிவன் இங்கே சிலையாக காட்சி தருவது சிறப்பாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த பக்தர்கள் நடைபயணமாக கோயிலை வந்தடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை