மேலும் செய்திகள்
சுமைப்பணி தொழிலாளர்கள் 'திடீர்' ஆர்ப்பாட்டம்
05-Jul-2025
திண்டுக்கல்: தேர்தல் கால வாக்குறுதியான 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்குவோம் என கூறியதை நிறைவேற்ற வேண்டும். ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த இதற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். செயலர் சிவஜோதி வரவேற்றார். மாநில துணைத் தலைவர்கள் கண்ணையன், முருகானந்தம் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் கோபிநாத், பிச்சைமுத்து பேசினர். மாவட்ட பொருளாளர் முத்துகுமரவடிவேல் நன்றி கூறினார்.
05-Jul-2025