ஆசிரியர் கூட்டணி கூட்டம்
வத்தலக்குண்டு: தமிழ்நாடு கள்ளர் பள்ளி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.வட்டார செயலாளர் தென்றல்அரசி வரவேற்றார். மாநில துணைத்தலைவர் கிருஷ்ணவேணி பங்கேற்றார்.மாவட்ட செயலாளர் தீனன் தீர்மானங்கள் வாசித்தார். 10 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலி பணியிடங்களில் நிரப்பாது காலம் தாழ்த்தினால் போராட்டங்களை தொடருவது என தீர்மானிக்கப்பட்டது.