உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சரக்கு வாகனங்களில் தொடரும் விபரீத பயணம்

சரக்கு வாகனங்களில் தொடரும் விபரீத பயணம்

பழநி: பழநி சுற்றுப்பகுதிகளில் சரக்கு வாகனங்களில் தொடரும் விபரீத பயணத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .பழநி பகுதிகளில் விவசாய தினக்கூலிகள், கட்டட தொழிலாளர்கள், தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் சரக்கு வாகன பயணத்தை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் இவர்களை அழைத்து செல்லும் நபர்கள் தனி வாகனங்களை பயன்படுத்தாமல் சரக்கு வாகனங்களை பயன்படுத்துவதால் தவிர்க்க இயலாத சூழலில் பயணிக்க வேண்டிய நிலை தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் சரக்கு வாகன பயணம் அதிகரித்து வருவதால் விபரீதத்தை தவிர்க்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள்,போலீசார் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை