உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலையடிவாரம் பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மலையடிவாரம் பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவாரம் பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இக்கோயில் சித்திரை திருவிழாவையொட்டி ஏப். 28 ல் கணபதி ஹோமம், இரவு சுவாமி சாட்டுதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை பானக்கம், பாலாபிஷேகம், இரவு சிறப்பு அலங்காரம் நடந்தது. நேற்று காலை 9 ந:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்ய கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்பட்டது. அங்குவிலாஸ் செல்லமுத்தையா, ஏ.ஆர்.ஓ., சாரங்கசரவணன், எம்.எஸ்.பி., பள்ளி தாளாளர் முருகேசன், வழக்கறிஞர் சுப்பிரமணியன், ஆடிட்டர் சிற்றம்பலம் நடராஜன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம்செய்தனர்.இன்று காலை பூச்சொரிதல், பூத்தட்டு ஊர்வலம் நடைபெறுகிறது. மே 5ம் தேதி கரகம் ஜோடித்து மின்அலங்கார ரதத்தில் அம்மன் வீதிஉலா வருகிறார். 6 ம் தேதி பால்குடம், 7 ம் தேதி பொங்கல் வைத்தல், மாவிளக்கு போடுதல், இரவு வில்லிசை நடக்கிறது. 9ம் தேதி மாலை அழகு போட்டு நகர்வலம், அக்னிசட்டி எடுத்து பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம், கரகம் விடுதல் நடக்கிறது.மே 10 ல் மஞ்சள் நீராட்டு , 11 ல் அன்னதானத்தை தொடர்ந்து மாலையில் ஊஞ்சல் மண்டகப்படி , 12 ம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாண்டி செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி