உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டத்தில் உள்ள அணைப்பகுதி பூங்காக்களை மேம்படுத்தலாமே ; சேதமடைந்தும், பராமரிப்பின்றியும் உள்ளதால்

மாவட்டத்தில் உள்ள அணைப்பகுதி பூங்காக்களை மேம்படுத்தலாமே ; சேதமடைந்தும், பராமரிப்பின்றியும் உள்ளதால்

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பூங்காக்கள் அமைத்து வசதிகள் செய்து தரவும், ஏற்கனவே உள்ள பூங்காக்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நங்காஞ்சி, பரப்பலாறு, மருதாநதி, குடகனாறு, பாலாறு-பொருந்தலாறு, குதிரையாறு, வரதமாநதி, மாவூர் உள்ளிட்ட அணைகள் உள்ளன. இதில் வரதமா நதி அணை, பாலாறு-பொருந்தலாறு அணை, குடகனாறு அணை பகுதிகளில் உள்ள பூங்காக்கள் அமைந்துள்ளது. ஆனால் அதன் உள்கட்டமைப்புகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த இயலாத நிலை இருக்கிறது. எனவே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பொழுதுபோக்கும் வகையில் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க வேண்டும் இதற்கு சுற்றுலாத்துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, உள்ள பூங்காக்களை மறுசீரமைப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல்வேறு உள்கட்ட அமைப்பு வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி கட்டணம் வசூலித்து வருவாய் ஈட்டவும் வழிவகை செய்ய முடியும். * மேம்படுத்த வேண்டும். பழநியில் அதிக பயணிகள் வரதமா நதி அணை பகுதிக்கு வருகின்றனர். அணைப்பகுதியின் முன்புறம் பூங்கா கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இக்கட்டமைப்பில் உள்ள பூங்காவில் இரண்டு நீர் ஊற்றுகள், சிமெண்ட் சரக்கு, ஊஞ்சல், விளையாட்டு உபகரணங்கள் இருக்கைகள், பொம்மைகள் சேதம் அடைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கொடைக்கானல் வரும் நிலையில் வரதமாநதி அணை பகுதிக்கு சென்று அங்கு உள்ள பூங்கா சேதம் அடைந்துள்ளதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதேபோல், மற்ற இடங்களிலும் சீரமைப்பு செய்ய வேண்டும். இல்லாத இடங்களில் பூங்காக்களை உருவாக்க வேண்டும். அரசு விரைவில் அணைப்பகுதிகளில் உள்ள பூங்காக்களை மேம்படுத்தினால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும் - யோகேஷ், வியாபாரி,பழநி,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ