கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி
திண்டுக்கல்: கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) கோட்டைக்குமார் , தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மலர் கொடி பங்கேற்றனர். கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடந்தது. திண்டுக்கல் தொழிலாளர் துறை அலுவலகத்திலிருந்து திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலம் நடந்தது. இலவச மருத்துவ முகாமும் நடந்தது. ஆட்டோ, பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.