உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையை சூழ்ந்த பனிமூட்டம்

கொடையை சூழ்ந்த பனிமூட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானல் ,தாண்டிக்குடியில் மிதமான மழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் இவ்விரு பகுதிகளிலும் மதியம் 12:00 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. சுற்றுலா நகரை பனிமூட்டம் சூழ்ந்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடுங்குளிர் நிலவியதால் குளிரை தாங்கும் ஸ்வெட்டர் அணிந்து பொதுமக்கள் நடமாடினர். வெயில் முகம் பாராது லேசான சாரல் அவ்வப்போது பெய்தது. சுற்றுலா பயணிகள் வரத்தின்றி நகர் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ