உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தப்பித்து ஓட முயன்ற கொலையாளி கால் முறிந்தது

தப்பித்து ஓட முயன்ற கொலையாளி கால் முறிந்தது

வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு இரட்டைக் கொலையில் தப்பி ஓட முயன்ற கொலையாளி கால் முறிந்தது.கொன்னம்பட்டியில் முன்விரோதம் காரணமாக கட்டட தொழிலாளி அழகுமலை 55, மனோகர் 50, ஆகியோரை அதே ஊரை சேர்ந்த நவீன் 22, கட்டையால் தாக்கி கொலை செய்தார். கொலை செய்த இடத்தில் தாக்குவதற்கு வைத்திருந்த கட்டையை எடுத்து வர வத்தலக்குண்டு போலீசார் நவீனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். கட்டையை தேடிய போது நவீன் தப்பியோட முயன்று கீழே விழுந்ததில் கால் முறிந்தது. வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்பபடுத்தப்பட்டார். அவருடன் அவரது தாய் கிருஷ்ணவேணி, பாட்டி சுந்தரியும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை