உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தரையிறங்கிய மேகக்கூட்டம் கொடையில் ரம்யம்

தரையிறங்கிய மேகக்கூட்டம் கொடையில் ரம்யம்

கொடைக்கானல்:திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானலில் நேற்று மிதமான மழை பெய்த நிலையில் மேக கூட்டமும் அவ்வப்போது தரையிறங்கி முத்தமிட்டு சென்றது. கொடைக்கானலில் சில மாதமாக வறண்ட வானிலை நீடித்து வந்தது. இரு வாரங்களாக சூறைக்காற்று வீசிய நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் நீர்வரத்து குறைந்து இங்குள்ள அருவிகள் வறண்டன. தொடர்ந்து புழுக்கம் நிலவியது. நேற்று காலை 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து நகரை பனிமூட்டம் சூழ வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேக கூட்டமும் அவ்வப்போது தரையிறங்கி முத்தமிட்டு சென்றது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவ ரம்யமான சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர்.தாண்டிக்குடி கீழ் மலை பகுதியிலும் சாரல் மழை பெய்தது. தற்போதைய மழை மலை தோட்டப்பயிர் களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ