மேலும் செய்திகள்
3 விபத்துகளில் மூவர் பலி
24-Jan-2025
டூவீலர் விபத்து பலி 2 ஆனது
07-Feb-2025
வடமதுரை : திருச்சி பாலக்கரையை சேர்ந்த 10 பேர் வேலைவாய்ப்புக்காக திருநெல்வேலியில் தேர்வு எழுதிவிட்டு காரில் ஊர் திரும்பினர். திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்தபோது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் அடுத்தடுத்து சென்ற இரு டூவீலர்கள் மீது மோதியது. முதல் டூவீலரில் சென்ற நிலக்கோட்டை பள்ளப்பட்டியை சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் காயமடைந்தனர். அடுத்த டூவீலரில் சென்ற திருச்சி மாவட்டம் வையம்பட்டி மொட்டையம்பட்டி பூ வியாபாரி பெரியசாமி 60, இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Jan-2025
07-Feb-2025