| ADDED : ஜன 06, 2024 06:27 AM
ஒட்டன்சத்திரம்,: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து பொதுமக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் எண் தேவைப்படுகிறது. அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும், வங்கி சேவைகள், வருமான வரி கட்டுவதற்கும் தேவையாகிறது. ஆள்மாறாட்டம் இன்றி அரசின் நலத்திட்ட உதவிகள் உரிய பயனாளிகளுக்கு சென்றடையவும் உதவுகிறது . பெயர், முகவரி, பிறந்த தேதி, அலைபேசி எண் உள்ளிட்டவற்றை திருத்தம் செய்வதற்கும், ஆதாரை புதுப்பிப்பதற்கும் ஆதார் சேவை மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆதார் சேவையை அனைத்து மக்களும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்...........சிறப்பு முகாம் நடத்தலாமேதாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், தலைமை போஸ்ட்ஆபீசில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது நகராட்சி , போஸ்ட் ஆபீசில் மட்டுமே ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் கிராமப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் ஆதார் திருத்தம் செய்ய வருகின்றனர். காலை 8 :00மணிக்குள் வந்தால் தான் டோக்கன் கிடைக்கும். அதுவும் அனைத்து நபர்களுக்கும் கிடைக்காது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது தொடர்கிறது. இதனால் கால விரயம் ஏற்படுகிறது. இன்னும் பலர் தாலுகா அலுவலகம் சென்று மறுபடியும் நகராட்சி அலுவலகத்திற்கு வருகின்றனர். பொது மக்களின் நலன் கருதி தாலுகா அலுவலகத்தில் முன்பு இருந்தது போல் ஆதார் திருத்தங்களை செய்ய வேண்டும். இதோடு ஊராட்சிகள் தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.எல். டி .ருத்திர மூர்த்தி, பா.ஜ., கிழக்கு ஒன்றிய தலைவர், ஒட்டன்சத்திரம்....................