ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் ஆர்னமன்டல் ஜெர்ரி பூத்தது
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் ஆர்னமன்டல் ஜெர்ரி பூ பூத்துள்ளது.பிரையன்ட் பூங்காவில் ஆர்னமன்டல் ஜெர்ரி மரம் உள்ளது. இவை குளிர்காலத்தை நினைவூட்டும் வகையில் மரங்களில் இலைகளின்றி பூக்கள் மட்டும் பூத்துக்குலுங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. பனிக்காலம் நிறைவடைந்த பின் பூக்கள் உதிர்ந்து இலைகள் துளிர்விடும். தற்போது இளம் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள ஜெர்ரி பூவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். சீதோஷ்ண நிலை மாற்றத்தை ஆர்னமன்டல் ஜெர்ரி சரியாக கணிப்பதாக தோட்டக்கலைத்துறையினர் கூறினர். 2024ம் ஆண்டு பனிப்பொழிவு இல்லாத நிலையில் இம்மரத்தில் பூ பூக்கவில்லை.