ஒட்டன்சத்திரத்தில் சரிந்தது அவரைக்காய் விலை
ஒட்டன்சத்திரம்: வரத்து அதிகரிப்பால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் அவரைக்காய் விலை கிலோவிற்கு ரூ.15 குறைந்து ரூ.35 க்கு விற்றது. ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனுார் சுற்றிய பகுதிகளில் அவரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே அவரை அறுவடை இருந்ததால் வரத்து குறைந்து கிலோ ரூ.50 க்கு விற்றது. இரு நாட்களாக பல இடங்களில் அறுவடை மும்முரம் அடைந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து கணிசமாக அதிகரித்தது. இதன் காரணமாக அவரைக்காய் விலை கிலோ ரூ.15 குறைந்து ரூ.35க்கு விற்றது. கமிஷன் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,'இனி வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் விலை இன்னும் குறையும்'என்றார்.