உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அர்ச்சனை தட்டில் போடும் காசு அர்ச்சகருக்கு சொந்தமில்லை! அறநிலையத் துறை சொல்கிறது

அர்ச்சனை தட்டில் போடும் காசு அர்ச்சகருக்கு சொந்தமில்லை! அறநிலையத் துறை சொல்கிறது

சென்னை : ''பக்தர்கள் தட்டில் போடும் காசை அர்ச்சகர் வீட்டுக்கு கொண்டுபோக உரிமை கிடையாது. அது கோவிலுக்கே சொந்தம்'' என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் 30க்கு மேலான உப கோவில்கள் உள்ளன. கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலும் அதில் ஒன்று. அங்கு, அர்ச்சனை தட்டில் பக்தர்கள் வைக்கும் பணத்தை, எடுத்து உண்டியலில் போடுமாறு பக்தர்களை ஊழியர்கள் நிர்பந்தம் செய்வதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதற்கு அறநிலைய துறை விளக்கம் அளித்துள்ளது.பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோவில் அர்ச்சகர் மோகன் நிரந்தர ஊழியராக உள்ளார். அவருடைய ஊதியம் 38,907 ரூபாய். சிறப்பூதியம், ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு பணப்பயன் மற்றும் அனைத்து படிகளும் வழங்கப்படுகிறது.ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு நிகரான அனைத்து பணப்பயன்களும் அவருக்கு கிடைக்கும். எனவே, பக்தர்கள் தட்டில் செலுத்தும் காணிக்கைகளை அர்ச்சகர் சொந்த உபயோகத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உரிமையில்லை. இதனால், கோவில் உண்டியலில் அந்த காணிக்கைகள் செலுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

S MURALIDARAN
நவ 03, 2024 15:58

பக்தர்கள் தட்டில் போடாமலேயே விட்டால் அப்போது என்ன செய்யும் இஅநிது ?


N Sasikumar Yadhav
நவ 01, 2024 00:56

இந்துமதத்தை அழிக்கவே திருட்டு திராவிட களவானிங்களால் உருவாக்கப்பட்டது தான் இந்துசமய துரோகத்துறை அதில் பணிபுரியும் கிரிப்டோக்கள்


Murugesan
அக் 31, 2024 14:28

திமுக அயோக்கியனுங்கன்கள்


DHANASEKARAN DEVAN
அக் 31, 2024 13:03

கோவிலுக்கு செலுத்த நினைக்கும் காணிக்கையை உண்டியலிலும்... அர்ச்சகரின் இறை சேவைக்கு கொடுக்க நினைக்கும் காணிக்கையை தட்டிலும் செலுத்துகிறோம். அறநிலையத்துறை தலையீடு அத்துமீறல்


Jagan (Proud Sangi)
அக் 30, 2024 18:55

சைவ கோவில் அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் , அவர்கள் "குருக்கள்" என்ற தனி வகை. அவர்கள் பிராமணர்கள் இல்லை. மேலும் பிராமணர்களுக்கு கோவில் கருவறையில் அனுமதி இல்லை, குருக்கள்களுக்கு மட்டுமே. அவர்களும் பூணுல் அணிவதால் எல்லோரும் பிராமணர்கள் என்று நினைக்கிறார்கள். ரொம்ப வறுமையில் உள்ளார்கள், முடிந்தால் g-pay செய்யுங்கள். சிவபெருமானின் நற்பார்வை கிடைக்கும்


Jagan (Proud Sangi)
அக் 30, 2024 18:36

அவர்கள் அரசு ஊழியர்கள் இல்லை. HR&C வசூல் செய்வதில் 750 இல்ல 2500 வரை சம்பளம் என்று கொடுப்பார்கள். மற்றபடி தட்டு வருமானம் தான். அரசு ஊழியர்களுக்கு உள்ள எந்த சலுகையும் கிடையாது. ஓய்வு ஊதியம், PF ஒரு மண்ணும் கிடையாது.


Jagan (Proud Sangi)
அக் 30, 2024 18:35

பெரும் வருமானம் உள்ள கோவில்களில் கூட அர்ச்சகர் மாத சம்பளம் 2500 தாண்டாது. தக்கார் மற்றும் EO கள் இதுபோல் உண்டியலில் போட்டுவைத்து அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.


Oru Indiyan
அக் 30, 2024 18:23

காலம் காலமாக அர்ச்சகர் தட்டில் கொடுக்கின்ற காசு, பணம், அர்ச்சகருக்கு தானே.


Bala
அக் 30, 2024 18:11

உண்டியல்ல போட்டா இ ஓ இன்னோவா வாங்குறார்.


Bala
அக் 30, 2024 18:10

அமைச்சர், எம் எல் ஏ, மற்ற அரசு பணியாளர்கள் எல்லாம் ஓசிலயா வேலை பார்க்குறீங்க? அப்புறம் ஏன் டேபிளுக்கு அடியில வாங்குறீங்க.


Jagan (Proud Sangi)
அக் 30, 2024 18:48

கோவில் அர்ச்சகர்கள் அரசு ஊழியர்கள் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை