உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விட்டு விட்டு பெய்த மழை

விட்டு விட்டு பெய்த மழை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று மதியத்திற்கு மேல் தொடங்கிய மழை விட்டு விட்டு இரவு வரை நீடித்தது.திண்டுக்கல்லில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. மதியம் 2:30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 15 நிமிடத்திற்கு மேல் விடாது பெய்தது. தொடர்ந்து 3 மணி முதல் சீரான இடைவெளியில் துாரல் விழுந்த வண்ணமே இருந்தது. விட்டு விட்டு பெய்த மழை இரவு வரை நீடித்தது. திருச்சி ரோடு நேருஜி ரவுண்டானா, நாகல்நகர், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடியே சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை