மேலும் செய்திகள்
மழையால் பாதித்தவர்களுக்கு பா.ஜ., நிவாரணம்
02-Oct-2024
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் தொடர்மழை காரணமாக 2 மாடி வீடு இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.வத்தலக்குண்டு மேலமந்தை தெருவை சேர்ந்த செல்லதுரை என்பவருக்கு சொந்தமான 40 ஆண்டு பழமையான மாடி வீடு உள்ளது. பழுதடைந்ததால் யாரும் வசிக்கவில்லை. கடந்த சில நாட்களாக மழை பெய்வதால்அந்த வீடு இடிந்து விழுந்தது. அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டூவீலர்கள் சேதமடைந்தன. சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.
02-Oct-2024