தினமும் தொடரும் நெரிசல்... தவியாய் தவிக்கும் ஓட்டிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான ரோடுகள் ஆக்கிரமிப்புகளால் குறுகி வாகன போக்குவரத்து நெரிசல் என்பது அன்றாட நிகழ்வாக உள்ளது. பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாமல் ரோடு நடைபாதைகளும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. இதோடு குறுகிய ரோடு ஓரங்களில் டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தியும் போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர். கண்டுகொள்ள வேண்டிய துறை அதிகாரிகளும் வழக்கம்போல் அசட்டை போக்கையே கடைபிடிக்கின்றனர்.