உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வரும் உடன்குடி முருங்கை

ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வரும் உடன்குடி முருங்கை

ஒட்டன்சத்திரம்:உள்ளூர் வரத்து குறைந்ததால் உடன்குடி பகுதியில் விளைந்த முருங்கைக்காய் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலப்பட்டி காவேரியம்மாபட்டி, சாலைப்புதுார், கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் முருங்கைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. தற்போது சீசன் முடியும் தருவாயில் இருப்பதால் மேற்கண்ட பகுதிகளிலிருந்து மார்க்கெட்டுக்கு முருங்கை வரத்து மிகவும் குறைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் விளைந்த முருங்கைக்காய் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு லாரிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவை தரமாக இருப்பதால் கிலோ ரூ.72க்கு விற்பனையானது. இதேபோல் உள்ளூர் பகுதியில் விளைந்த முருங்கைக்காய் கிலோ ரூ.72க்கு விற்பனையானது. கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில் ''இனி வரும் நாட்களில் முருங்கை வரத்து, தேவையின் அடிப்படையில் விலையில் மாற்றம் இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ