மேலும் செய்திகள்
புதுக்கோட்டையில் தொடரும் திருட்டு மக்கள் அச்சம்
21-Aug-2025
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கோயிலில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 6 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி கவசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். வி.டி.பட்டி ஊராட்சிக்கு கோவில்பட்டியில் பசுபதீஸ்வரர் அலங்காரவள்ளி அம்மன் கோயிலில் பூஜாரி சுப்பிரமணி பூஜையை முடித்துவிட்டு பூட்டிவிட்டு சென்று விட்டார். நேற்று மீண்டும் வந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 6 கிராம் தங்க நகை மற்றும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவசத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை சாணார்பட்டி போலீசார் தேடிவருகின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் இதே கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.
21-Aug-2025