உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜவுளி கடையில் திருட்டு

ஜவுளி கடையில் திருட்டு

வேடசந்துார் : வேடசந்துார் நகர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடைவீதி வடமதுரை ரோடு, ஆத்துமேடு உள்ளிட்ட நகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான குக்கிராம மக்கள் பொருட்களை வாங்க திரண்டனர். இந்நிலையில் கடை வீதியில் உள்ள கிருஷ்ணா ஜவுளிக்கடையில் ஜவுளி எடுப்பது போல் உள்ளே நுழைந்த 2 பெண்கள் சேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். பின் அங்கு வைத்திருந்த 20 சேலைகள் அடங்கிய ஒரு பண்டலை துாக்கி பைக்குள் வைத்து திருடினர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை