ஓட்டல்களில் விலைப்பட்டியல்... இல்லை சுகாதாரமும் இல்லாததால் பாதிப்பு
பழநி :திண்டுக்கல் மாவட்டத்தில் சில ஓட்டல்களில் விலை பட்டியல் இல்லாததால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், மேலும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது தொடர்ந்து சாலை ஓர கடைகள் அதிகரித்துள்ளன . இங்கு சுகாதாரமற்ற முறையில்உணவுகள் தயாரிப்பதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் மாவட்டத்தில் உயர்தர, நடுத்தர ஓட்டல்கள், நான்கு வழிச்சாலை , பிரதான சாலை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி சில ஓட்டல்கள் விலை பட்டியல், சுகாதாரம் ஆகியவற்றை கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் நடுத்தர, சாலையோர ஓட்டல்களில் விலை பட்டியல் பெரும்பாலும் இருப்பதில்லை. இங்கு சாப்பிட வருபவர்கள் குழப்பம் அடைகின்றனர். இங்கு சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. தடை பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் பயன்பாடு உள்ளன. ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில் திடீர் கடைகள் பழநியில் அமைக்கப்படுகின்றன. இவற்றை முறைப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட வேண்டும். திடீர் கடைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தரம், தடை செய்யப்பட்ட நிறமூட்டிகள் ,விலை பட்டியல் ஆகியவற்றை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலைபேசியில் இருந்து டிஜிட்டல் முறைகளில் பணம் பெறுவதை சில ஓட்டல்களில் தவிர்த்து வருகின்றனர். இதனால் பணம் எடுத்து வராத பக்தர்கள் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை செலுத்த இயலாமல் சிரமம் அடைகின்றனர். சாப்பிட்ட பின் பணம் செலுத்த முடியாமல் திணறுகின்றனர். இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ............ நடவடிக்கை வேண்டும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது முன்னிட்டு பழநியில் சாலையோர ஓட்டல்கள் அதிகரித்து வருகின்றன. அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களை திரும்ப பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காலாவதி ஆன பொருட்களை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஜிட்டல் இந்தியா நடைமுறையில் அதிக அளவில் அலைபேசி மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். ஆனால் சில கடைகளில் அவற்றைத் பெற மறுத்து பணம் வாங்குவதால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர் . அஜித்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர், ஹிந்து முன்னணி, பழநி . ......