உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓடவும் கிடையாது... ஒளியவும் கிடையாது; நடிகை கஸ்தூரி வீடியோ வைரல்

ஓடவும் கிடையாது... ஒளியவும் கிடையாது; நடிகை கஸ்தூரி வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஐதராபாத்தில் கைது செய்வதற்கு முன்பாக, நடிகை கஸ்தூரி பேசி வெளியிட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான அவரை, நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q8qu8vp2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கைது நடவடிக்கையின் போது, தான் தலைமறைவாக இருந்ததாக வெளியான செய்தி பற்றி, நடிகை கஸ்தூரி விளக்கம் கொடுத்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நான் ஐதராபாத்தில் தான் வசிக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். தினமும் இங்கு ஷூட்டிங் இருக்கிறது. நான் தலைமறைவு என்பது எல்லாம் கிடையாது. என்னுடைய செல்போன் என்னிடம் இல்லை. என்னுடைய வக்கீலிடம் தான் உள்ளது. மன உளைச்சல் அதிகமாக இருந்தது, பத்திரிக்கையாளர் தொடர்ந்து போன் செய்ததால், வாங்கி வைத்து கொண்டார். இப்போது கூட இந்த வீடியோவை வேறு ஒருவரின் செல்போனில் தான் பதிவு செய்தேன். நான் எப்போதும் ஓடி ஒளிய மாட்டேன். ஷூட்டிங் முடிந்து வந்த பிறகு, என்னுடைய ஒத்துழைப்பின் பேரிலேயே போலீசார் என்னை சென்னை அழைத்து வருகின்றனர். மீடியாவில் என்னை தலைமறைவு, பயந்து ஓடினேன், என வெளியிட்டு வருகின்றனர். இதுவரையில் எந்த விதிமீறலும் செய்யவில்லை, இனியும் செய்ய மாட்டேன். எனக்கு பயம் எல்லாம் இல்லை. தலைமறைவு என்று வெளியாகும் செய்திகளுக்கு இதுவே முற்றுப்புள்ளி.இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Velan Iyengaar
நவ 18, 2024 08:45

களி தான் திங்கப்போகிறோம் என்று தெரிஞ்சி என்ன என்ன வேலை எல்லாம் செஞ்சிருக்கிறார் பிழைப்பு சிரிப்பா சிரிக்குது


Velan Iyengaar
நவ 18, 2024 08:43

ஷூட்டிங் முடிந்ததும் தயாரிப்பாளர் சொகுசு பங்களாவில் என்ன செய்துகொண்டிருந்தார் என்று தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்தில் உள்ளேன் ஹா ஹா .. பேட்டா வாங்கிக்கொண்டிருந்தாரா? இல்லை தனிக்கூலி வாங்கிக்கொண்டிருந்தாரா? தயாரிப்பாளர் சொகுசு பங்களாவில் என்ன மாதிரி ஷூட்டிங் நடந்தது ??


Sivagiri
நவ 17, 2024 23:39

சேரக்கூடாத இடம்தன்னில் சேர வேண்டாம் , ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் ,


Kanns
நவ 17, 2024 23:35

SHAMEFUL JUSTICE.


Velan Iyengaar
நவ 18, 2024 08:40

இப்போ மட்டும் ஆனந்த் வெங்கடேஷ்??


Velan Iyengaar
நவ 17, 2024 22:31

ரொம்போ முக்கியமா தெரிஞ்சிக்கவேண்டிய தகவல்.... இந்த பாரம்பரியத்தை தூக்கி பிடிக்க பொது மேடையில் இப்படி பேசி அந்த சங்கத்து உறுப்பினர்களுக்கு பங்கம் விளைவித்த கொடுமைக்கு அவர்களும் கேசு கொடுப்பார்கள் என்று பின்புறமாரா அதாவது மனதார என்பதற்கு ஈடான வேண்டுகிறேன்.


Velan Iyengaar
நவ 17, 2024 22:28

எதாவது ஒரு ஆணித்தரமான பேச்சு பேசி .. எதாவது சமுகத்துக்கு சிறிதளவாவது உபயோகப்படும் பேச்சை பேசி இப்படி சிக்கலில் சிக்கி இருந்தாலாவது ஏதவது தேறி இருக்கும்... இப்போ இதனோட புத்திபலம் அநியாயத்துக்கு வெளிப்பட்டு மானக்கேடான போய் .. அய்யகோ ... இதனோட முடிவு இப்படியா இருக்கனும் ... பக்கத்துல இருந்து சைடில் வெறித்து பார்த்து கைதட்டி ரசித்த கும்பலை வலை வீசி தேடினாலும் கிடைக்கமாட்டேங்குது என்பது இன்னொரு பரிதாபம் .....இந்நேரம் அந்த கும்பல் பொங்கி எழுந்து இதுக்கு ஒரு ஆர்ப்பாட்டம் எய்யும் என்று பார்தால் ...அந்த கும்பலை எங்க போய் தேடுவது ....இந்தப்பக்கம் அந்தப்பக்கம் நின்னு பார்த்து ஜொள்ளு விட்டதோடு அவங்க ஜென்மசாபலயம் கிட்டி காணாமல் போய்விட்டார்கள் ....


Velan Iyengaar
நவ 17, 2024 22:24

எங்கப்பன் குதுருக்குள்ள இல்லவே இல்ல ஹா ஹா ஹா .... எதுக்கு இந்த வீராப்பு ?? வாய்ச்சவடால் என்பது தெள்ள தெளிவு .... ஆனா சாயம் வெளித்திருச்சி .


Sathyanarayanan Sathyasekaren
நவ 18, 2024 04:49

இதே வேகத்தை ஒலித்துக்கொண்டிருக்கும் அமைச்சரின் தம்பியை கைது செய்ய கொத்தடிமை போலீசுக்கு வக்கில்லையா?


Ganapathy
நவ 17, 2024 22:10

ஒருவேளை பெயர் கஸ்தூரி என்றில்லாமல் ஒரு பாத்திமா அல்லது மேரி என்றிருந்தால் கிண்டலாக எழுதுவாரா?


வைகுண்டேஸ்வரன்
நவ 17, 2024 21:34

இங்கே கஸ்தூரிக்கு வக்காலத்து வாங்கி எழுதிய யாரும் நீதிமன்றத்துக்கும் போகலை, புழல் சிறை வாசலுக்கும் போகலை. அதே மாதிரி ஆதரவா பேசின எச் ராஜா, சீமான் யாரும் நீதிமன்றத்துக்கும் போகலை, புழல் சிறை வாசலுக்கும் போகலை. கஸ்தூரி பாவம் அரசியல் ஒழிக ன்னோ என்னவோ கத்திட்டு வண்டில ஏறி போயிடுச்சு.


rama adhavan
நவ 18, 2024 00:31

தனிப்பட்டவர் மீது போட்ட வழக்கில் யாரும் துணைக்கு வர முடியாது. நீதிமன்றத்தில் பலர் இம்பிலீடிங் மனு போட்டு வாதம் செய்வார்கள். இதற்கு நடுவில் ஜாமீன் மனு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.


வைகுண்டேஸ்வரன்
நவ 17, 2024 21:31

கஸ்தூரி சொன்னது எல்லாம் பொய். 1. போனை சுவிட்ச் ஆப் பண்ணி வக்கீல் கிட்ட குடுத்தது, முதல் ஒளியல். 2. ஹைதெராபாத் போனது ஓட்டம், ரெண்டாவது ஒளியல். 3. தங்கியிருந்தது ஒரு தயாரிப்பாளர் ஹரி என்பவர் வீட்டில். இது மூணாவது ஒளியல். 4. போலீஸ் வந்து கதவைத்தட்டியும் ரொம்ப நேரம் திறக்காதது நாலாவது ஒளியல். 5. அந்த ஊர் போலீசும் வந்து, கதவைத் திறக்காவிட்டால் உடைத்துக் கொண்டு உள்ளே வர நேரிடும் என்று சொல்லும் வரை திறக்காதாது ஐந்தாவது ஒளியல். இவ்வளவு பட்டும் இன்னுமா திருந்தவில்லை??


Anantharaman Srinivasan
நவ 17, 2024 21:53

ஆண் பசங்க மாதிரி நெஞ்சுவலினு ஆஸ்பத்திரியிலே போய் இருந்துக்கலையே..


சமீபத்திய செய்தி