பெண்ணிடம் நகை பறிப்பு தேனியைச் சேர்ந்த மூவர் கைது
கொடைக்கானல்:கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த திண்டுக்கல் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் தேனி பெண்கள் இருவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் சீலப்பாடியை சேர்ந்த பகவதிராஜ் மனைவி அனிதா 28.இவரது தாய் வீடு தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டியில் உள்ளது. தாய் வீட்டின் அருகே வசிக்கும் நந்தினி 24, லாவண்யா 24, உடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ஏப்.21 ல் அனிதா,தனது குழந்தைகள் , லாவண்யா, நந்தினி ஆகியோர் உடன் கொடைக்கானல் சுற்றுலா வந்தார். எம்.எம்.தெருவில் உள்ள விடுதியில் தங்கிய போது அன்றிரவு மங்கி குல்லா அணிந்தபடி கதவை தட்டிய நபர் கத்தியை காட்டி மிரட்டி மூவரிடமும் எட்டரை பவுன் நகைகளை பறிந்து தப்பினார். இதுதொடர்பான புகாரில் சந்தேகமடைந்த கொடைக்கானல் போலீசார் சிசிடிவி கேமரா , பெண்களின் நடவடிக்கையை கண்காணித்து விசாரித்ததில் ,அனிதாவின் நகையை அபகரிக்க நந்தினி, லாவண்யா கட்டக்காமன்பட்டியை சேர்ந்த சாந்த குமாரை 22, தயார் செய்து திட்டமிட்டு இதில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவத்திற்குப்பின் எதுவுமே தெரியாததுபோல நாடமாடியுள்ளனர். இதை தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார் நகைகளை மீட்டனர்.