இன்று பரத அரங்கேற்றம்
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் அமிர்தவர்ஷினி இசை நடன பள்ளி சார்பில் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று மாலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது. மாணவிகள் ஹர்ஷிதா, தேவதர்ஷினி, வான்மதி, தர்ஷிதா அரங்கேற்றம் செய்கின்றனர். இசை பள்ளி நிறுவனர் வெங்கடேஸ்வரன் ஒருங்கிணைக்கிறார். நட்டுவாங்கம் வேல்மணி, வாய்ப்பாட்டு நரேந்திரன், மிருதங்கம் ஜூலியஸ், வயலின் ராஜகோபால் வாசிக்கின்றனர். அண்ணா பல்கலை தொடர்பு அலுவலர் கலைச்செல்வி, பி. எஸ். ஆர்., நர்சிங் காலேஜ் சி.இ.ஓ., மகேந்திர பாண்டியன் தொகுத்து வழங்குகின்றனர்.