வியாபாரிகள் வாங்காததால் குப்பைக்கு வந்த தக்காளி
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல மாவட்டத்தில் மழையால் பூச்சி தாக்குதலுக்கு உள்ளான தரம் குறைந்த தக்காளியை வியாபாரிகள் வாங்காததால் விவசாயிகள் அவற்றை குப்பையில் கொட்டினர்.ஒட்டன்சத்திரம் சுற்றியபகுதிகளில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது. தக்காளி வீணாவதை தடுப்பதற்கு இப்பகுதிகளில் பந்தல் தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் பூச்சி தாக்குதல் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டிற்கு தரம் குறைந்த தக்காளி அதிகமாக விற்பனைக்கு வருகிறது. இந்த பூச்சி தாக்குதலுக்கு உள்ளான தக்காளியை வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை. இதனால் இவற்றை பிரித்தெடுக்கும் விவசாயிகள் குப்பையில் கொட்டி செல்கின்றனர்.