மேலும் செய்திகள்
பிரேக் பிடிக்காத பஸ்சால் அதிர்ச்சி
09-Sep-2025
பட்டிவீரன்பட்டி: கே. சிங்காரக்கோட்டையில் கல்லுாரி மாணவர்கள் சென்ற சுற்றுலா பஸ் வீட்டிற்குள் புகுந்தது. சென்னை தனியார் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் பஸ்சில் மூணாறு வந்தனர். சென்னையை சேர்ந்த மணிகண்டன் 45, ஓட்டினார். நேற்று அதிகாலை கே.சிங்கார கோட்டையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கணேசன் என்பவரது வீட்டின் சுவரில் மோதி நின்றது. வீட்டின் முன் பக்க சுவர், அவரது கார் சேதமடைந்தது. பஸ் டிரைவர் மணிகண்டன் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் காயம் இன்றி தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Sep-2025