உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் : - கொடைக்கானலில் வார விடுமுறையடுத்து வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கொடைக்கானலில் தொடர் மழை பெய்த நிலையில் குளு, குளு நகர் சில்லிட்டது. கனமழையால்திடீர் அருவிகள் உருவாகின. சில தினங்களாக வறண்ட வானிலையுடன் ரம்யமாக சூழல் நிலவுகிறது. பிரையன்ட் பூங்கா. ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள், ஏரியில் படகு சவாரி செய்தனர். கேரளா,வெளி மாநில சுற்றுலா பயணிகளின் வருகையால் சுற்றுலா நகர் களைகட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ