| ADDED : மார் 15, 2024 10:15 PM
திண்டுக்கல்:செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல்லுக்கு காலை 11:15 மணிக்கு வரும். மணப்பாறை - கொளத்துார் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால், இந்த ரயில் நேற்று திண்டுக்கல் வராமல் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மயிலாடுதுறை சென்றது. முன் அறிவிப்பு எதுவும் இல்லாததால், இதை அறியாமல் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பலமுறை ரயில்வே நிர்வாகம் இதுபோல தான் முன்னறிவிப்பின்றி ரயில்களை மாற்று வழியில் இயக்குகிறது. எனவே, முன்னறிப்பு அவசியம் என, ரயில் பயணிகள் வலியுறுத்தினர்.