உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பூச்சிமருந்து குடித்து போக்குவரத்து ஊழியர் தற்கொலை

 பூச்சிமருந்து குடித்து போக்குவரத்து ஊழியர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் போக்குவரத்து ஊழியர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல், பித்தளைப்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா 43. நாகல் நகரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக உள்ள இவருக்கு திருமணமாகி உமா மகேஸ்வரி 40 என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகன் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலில் கருப்பையா பூச்சி மருந்து குடித்து பித்தளைப்பட்டி கல்லறை அருகே உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் மயங்கி கிடந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், பின் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ