உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

திண்டுக்கல்,: திண்டுக்கல் அருகே 1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை பிரிவினர் லக்கையன்கோட்டை பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியே வந்த இலகு ரக சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். 30 மூடைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டனர். இதை தொடர்ந்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார் வாகன உரிமையாளரான லக்கையன்கோட்டை ஆனந்தராஜ் 41, டிரைவரான குமரன் நகர் பட்டத்தரசன் 34, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை