உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ் ஸ்டாண்டில் இருவர் உடல் மீட்பு

பஸ் ஸ்டாண்டில் இருவர் உடல் மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒட்டன்சத்திரம் நெல்லுக்குழிக்காட்டை சேர்ந்த கழுவத்தேவர் 65, இறந்து கிடந்தார். இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர் என போலீஸ் விசாரணையில் தெரிந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்படும் தனியார் ஓட்டலை ஒட்டிய சாக்கடையில் அடையாளம் தெரியாத 35 வயது ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். சட்டை பையை சோதனை செய்ததில் மகேந்திரன் என பெயரிடப்பட்ட ஏ.டி.எம்.,கார்டு இருந்தது. வேறெந்த அடையாளமும் இல்லை. இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி