உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கன்டெய்னர் மீது கார் மோதல் வக்கீல் உட்பட இருவர் பலி

கன்டெய்னர் மீது கார் மோதல் வக்கீல் உட்பட இருவர் பலி

நிலக்கோட்டை:திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியில் கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜபிரபு 40, உட்பட இருவர் பலியாயினர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆனையூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜபிரபு. இவர் தன் காரில் மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த கார்த்திக்குடன் 30, வத்தலக்குண்டிலிருந்து மதுரைக்கு சென்றார். காரை ராஜபிரபு ஓட்டினார்.சிலுக்குவார்பட்டி அருகே சென்ற போது எதிரே துாத்துக்குடியிலிருந்து வந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது. டிரைவர் சுரேஷ் 49, கட்டுப்பாட்டை இழந்து கன்டெய்னர் லாரி ரோட்டோர மின் கம்பம் மீது மோதி நின்றது. இதில் வழக்கறிஞர் ராஜபிரபு, கார்த்திக் பலியாயினர். நிலக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து இடிபாடுகளில் சிக்கிய இருவரின் உடல்களை மீட்டனர். விபத்து குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை