உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேடசந்துாரில் ரூ.28 கோடியில் திட்ட பணிகள்: உதயநிதி துவக்கி வைத்தார்

வேடசந்துாரில் ரூ.28 கோடியில் திட்ட பணிகள்: உதயநிதி துவக்கி வைத்தார்

வேடசந்துார்: வேடசந்துாரில் ரூ.28.14 கோடி மதிப்பிலான 39 முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி, ரூ.49.59 கோடி மதிப்பிலான 23 புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். வேடசந்துார் அரசு மருத்துவ மனையில் கட்டப்பட்ட விபத்து, அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை துணை முதல்வர் உதயநிதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேலும் காமராஜர் பஸ்ஸ்டாண்ட் கட்டடம், புதிய வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட 28.14 கோடி மதிப்பிலான 39 முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்தார். ரூ. 49.59 கோடி மதிப்பிலான கட்டடங்கள் உள்ளிட்ட 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மகளிர் குழுவை சேர்ந்த 5 ஆயிரத்து 478 பயனாளிகளுக்கு, ரூ. 61.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,''திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி. செயல்பாட்டால் கிராமங்கள் எல்லாம் நகரம் போல் முன்னேறி வருகிறது ''என்றார். அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, கே.ஆர்.பெரிய கருப்பன், கலெக்டர் சரவணன்,கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் காந்திராஜன், செந்தில்குமார், தி.மு.க., பேரூர் செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர்கள் மேகலா, நிருபாராணி கணேசன் , ஒன்றிய செயலாளர் சுப்பையன், பாண்டி,நகர செயலாளர்கள் வடமதுரை கணேசன், கருப்பன், இலக்கிய அணி இளங்கோ பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி