உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் பாதாள சாக்கடை பூமி பூஜை

பழநியில் பாதாள சாக்கடை பூமி பூஜை

பழநி : பழநி நகராட்சியில் ரூ. 120 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம், கழிவு நீர் குழாய் அமைத்தல், சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றிற்கு பூமி பூஜை நடைபெற்றது.பழநி நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம்ல கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் லகழிவுநீர் உந்து குழாய் திட்டத்திற்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவக்கி வைத்தார்.அப்போது எம்.எல்.ஏ., பேசியதாவது: பழநி நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழநியை திருப்பதி போல் மாற்றும் பணிக்காக 58 ஏக்கரில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. பழநி போல் கொடைக்கானலில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட உள்ளது. குப்பை கிடங்கை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பச்சையாறு அணை திட்டம் குறித்து சட்டசபையில் பேசப்பட்டுள்ளது. நெய்க்காரப்பட்டியில் ரூ.54 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்து வீடு தோறும் தண்ணீர் வழங்கப்பட உள்ளது என்றார்.நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி, கமிஷனர் சத்தியநாதன் ,பொறியாளர் ராஜவேல், தி.மு.க.,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர செயலாளர் வேலுமணி, நகர் இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை