உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வைகாசி திருவிழா தேரோட்டம்

வைகாசி திருவிழா தேரோட்டம்

வத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. மகா பரமேஸ்வரி மாரியம்மன் ராஜ அலங்காரத்துடன் தேரில் அமர வைத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மண்டகப்படிகளில் எழுந்தருளிய அம்மனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆங்காங்கே பக்தர்கள் அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். தப்பாட்டம், தேவராட்டம், கும்மி, கோலாட்டம் வானவேடிக்கையுடன் தேரோட்டம் நடந்தது. எஸ்.பி., பிரதீப் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாணவேடிக்கையின் போது பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு பாலமுருகனின் வயிற்றில் பட்டாசு பட்டதில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை