உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமதுரை லாரி மீது வேன் மோதி விபத்து

வடமதுரை லாரி மீது வேன் மோதி விபத்து

வடமதுரை: திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பத்தை சேர்ந்த டிரைவர் கண்ணதாசன். உர மூடைகளுடன் லாரியை தேனிக்கு ஓட்டி சென்றார். அய்யலுார் புதுவாடிபுதுார் பகுதியில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு லாரி பழுதாகி நின்றது. கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதியினரின் வேன் லாரியின் பின்புறத்தில் மோதியது. வேன் டிரைவரான அருள் 22, கோகுல் 20 உட்பட 5 பேர் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ