உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு

வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு

ஒட்டன்சத்திரம்:வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.ஒட்டன்சத்திரம், சுற்றியுள்ள கிராம பகுதிகள், பக்கத்து மாவட்டங்களில் பயிரிடப்படும் காய்கறிகள் இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் மொத்த கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் 70 சதவீதம் கேரள வியாபாரிகளும், 30 சதவீதத்தை தமிழக வியாபாரிகளும் வாங்குகின்றனர்.மழையால் முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்துவிட்டது. மகசூல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ள நிலையில் முருங்கை விலை அதிகரித்துள்ளது. முன்னர் கிலோ ரூ.22 க்கு விற்ற கரும்பு முருங்கை ரூ.33, ரூ.4க்கு விற்ற பீட்ரூட் ரூ.6, ரூ.1.50 க்கு விற்ற சுரைக்காய் ரூ.2, ரூ.5க்கு விற்ற டிஸ்கோ கத்தரிக்காய் ரூ.6க்கு விற்பனை ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை