யோகா, ஸ்கேட்டிங்கில் சாதித்த வித்விதா பள்ளி
ஒட்டன்சத்திரம்: ஸ்ரீராமபுரம் வித்விதா அகாடமி பள்ளி மாணவர்கள் 66 பேர் பழநி சிவாலயா யோகா மையம் சார்பில் நடந்த குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் 2024 போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தலா 5 மாணவர்களுக்கு சாம்பியன் ஆப் சாம்பியன் விருது , நீண்ட யோகாசனப் பயிற்சி விருது, 25 மாணவர்களுக்கு யோகாசனம் நிறைவு விருது, 31 மாணவர்கள் பங்கு பெற்றமைக்கான பதக்கங்களை வென்றனர். இப்பள்ளிக்கு ஓவர் ஆல் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.மேலும் திண்டுக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 22 பேர் கலந்து கொண்டதில் 7 பேர் தங்கம், 8 பேர் வெள்ளி, 9 பேர் வெண்கல பதக்கம் வென்றனர். இப்பள்ளிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைவர் சாமிநாதன், தாளாளர் சித்தார்த்தன், செயலர் கௌதமன், அறங்காவலர்கள் சுகன்யா, ராதிகா பாராட்டினர்.