உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை உணவகத்தில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

கொடை உணவகத்தில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

கொடைக்கானல் ; கேரள மாநிலம் குருவாயூர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், 196 பேர் சுற்றுலாவிற்காக நேற்று முன்தினம் கொடைக்கானல் வந்தனர். இங்கு ஏரி சந்திப்பு பகுதி தனியார் விடுதியில் தங்கிய இவர்கள், இரவில் அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர். இதை தொடர்ந்து நேற்று அதிகாலை, 82 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.உடனடியாக அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பொது சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்களிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர். வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த கிருஷ்ணன் கூறுகையில்,''உடல்நலக் குறைவுக்கு மாணவர்களுக்கு உணவில் ஏதேனும் பிரச்னையா, அதை கையாளும் முறையில் பிரச்னையா என கண்டறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார். உணவு பாதுகாப்பு அலுவலர் லாரன்ஸ் கூறுகையில்,''தனியார் விடுதி உணவகத்தில் உள்ள மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அறிக்கை வரும் வரை சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு உணவு தயாரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை