உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சத்துணவு ஊழியர் அடித்துக்கொலையா

சத்துணவு ஊழியர் அடித்துக்கொலையா

வேடசந்துார்: வேடசந்துாரில் வசித்து வந்த சத்துணவு சமையலர் ராணி முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்த நிலையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரிக்கின்றனர்.ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஜி.நடுப்பட்டி ஊராட்சி கோம்பையூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராணி 55. ஜி.நடுப்பட்டி அரசு ஆரம்ப பள்ளியில் சத்துணவு சமையலராக உள்ளார். கணவர் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடால் 20 ஆண்டுகளாக பிரிந்து தனியாக வாழ்கின்றனர். 6 மாதங்களுக்கு முன்பு வேடசந்துார் மாரம்பாடி ரோட்டில் உள்ள காமராஜர் நகரில் ராணி வாடகைக்கு வீடு பிடித்து குடியிருந்து வந்தார். அங்கு வீட்டுக்கு பின்புறம் முகத்தில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.சமையலர் ராணி தனியாக வசித்து வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி