உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்தில் அதிகரிக்கும் கழிவு தக்காளி

ஒட்டன்சத்திரத்தில் அதிகரிக்கும் கழிவு தக்காளி

ஒட்டன்சத்திரம்: விவசாயிகளால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு அனுப்பபடும் தக்காளிகள் பெரும்பாலும் அழுகளாக உள்ளதால் அதை வியபாரிகள் கழித்து குப்பையுடன் கொட்டுவதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், பாவாயூர், கல்லுப்பட்டி, வலையபட்டி, காளாஞ்சிபட்டி, இடையகோட்டை, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கப்பலப்பட்டி காவேரியம்மாபட்டி சுற்றிய கிராமப் பகுதிகளில் தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. அவ்வப்போது மிதமான மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளில் உள்ள தக்காளி அழுகியும் நோய் தாக்குதலுக்கு ஆளாகி கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. இவற்றை அப்படியே விவசாயிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். மார்க்கெட்டில் கழிவு தக்காளி தனியாக பிரிக்கப்பட்டு தரையில் கொட்டி அழிக்கப்படுகிறது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ஒன்றில் 4 கிலோ முதல் 5 கிலோ வரை கழிவு தக்காளிகள் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதிலும் கிலோ தக்காளி தரத்திற்கேற்ப கிலோ ரூ.10 முதல் ரூ.22 வரை விற்பனை ஆனது.கமிஷன் கடை உரிமையாளர் பிரபாகரன் கூறியதாவது: மழைக்காலமாக இருப்பதால் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி கழிவு தக்காளி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவற்றை விவசாயிகள் அங்கேயே கழித்துவிட்டு மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தால் நல்ல விலை கிடைக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை