உள்ளூர் செய்திகள்

திருக்கல்யாணம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கல்லுாரி வளாகத்தில் உள்ள மகாலிங்கேஸ்வரர், சவுடம்மன் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் விழா நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். மாலை மாற்றுதல், பூப்பந்து விளையாடுதல் , மோதிரம் தேடுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சக்தி கல்வி குழுமத் தாளாளர் வேம்பணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை